பதிவு செய்த நாள்
06
பிப்
2021
11:02
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், பிரம்மோற்சவ விழாவில் நேற்று, கருடசேவை உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை, உற்சவர் பார்த்தசாரதி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. இதையடுத்து, கருட வாகனத்தில் உற்சவர் எழுந்தருளினார்.நேற்று காலை, 5:30 மணிக்கு கோபுர வாசல் தரிசனம் நடந்தது. பின், மாடவீதிகளை வலம்வந்த, பார்த்தசாரதி பெருமாள், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கோவிந்தா நாமத்தை உச்சரித்தனர்.