பதிவு செய்த நாள்
06
பிப்
2021
11:02
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, சிவபெருமானின் பேரருளை பெற்று சிவபதம் அடைந்த, நடந்தது.தை மாதம் விசாக நட்சத்திர நாளான நேற்று, திருநீலகண்டநாயனார் குருபூஜை நடந்தது.
இதையொட்டி, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அனைத்து சிவனடியார் திருக்கூட்டமைப்பினர் சார்பில், திருநீலகண்டருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. திருமுறை மற்றும் திருத்தொண்டர் புராணம் பாராணயம் செய்யப்பட்டது.l திருப்பூர், தாராபுரம் ரோடு, கரட்டாங்காடு ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில், குலாலர் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் சார்பில், 45வது ஆண்டு குருபூஜை நேற்று நடந்தது. திருநீலகண்ட நாயனார், ரத்தினாச்சல அம்மையார், அபிேஷக ஆராதனையும், மகா தீபாராதனையும் நடந்தது. சிவனடியாருக்கு, திருஅமுதுடன் திருவோடு வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.l அவிநாசி குலாலர் திருமண மண்டபத்தில், குலாலர் சமுதாயத்தின் சார்பில் நடந்த விழாவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, வழிபாடுகள் நடந்தன.