பதிவு செய்த நாள்
06
பிப்
2021
12:02
அன்னூர்: பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.
மொண்டிபாளையம் அருகே திம்ம நாயக்கன் புதூரில், பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி நாளன்று சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். தேய்பிறை அஷ்டமியான நேற்றுமுன்தினம் இரவு சிறப்பு வேள்வி நடந்தது. இதையடுத்து பைரவருக்கு, பால், நெய், தேன், வில்வம், சந்தனம் உள்ளிட்ட ஒன்பது வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 9:00 மணிக்கு, அலங்கார பூஜையும் இதையடுத்து அன்னதானம் வழங்குதலும் நடந்தது. பைரவர், முருகப்பெருமானின் அலங்காரத்தில், அருள்பாலித்தார். மொண்டிபாளையம், அன்னூர் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பட விளக்கம் : அன்னூர் அருகே திம்மநாயக்கன் புதூர், பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் பைரவர், முருகப்பெருமான் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.