பதிவு செய்த நாள்
06
பிப்
2021
05:02
ஆத்தூர்: தை நான்காவது வெள்ளியையொட்டி, ஆத்தூர், வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், தை வெள்ளி விழா குழு சார்பில், பால் அபி?ஷகம் நேற்று நடந்தது. இதற்காக, காலை, 11:30 மணிக்கு, திரளான பெண்கள், ஆத்தூரிலிருந்து, பால்குடங்களை எடுத்து, ஊர்வலமாக, கோவிலுக்கு வந்தனர். அங்கு, மூலவர் பாலசுப்ரமணியருக்கு, உலக நன்மை வேண்டி, 2,000 லிட்டர் பால் அபி?ஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு, வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடந்தது. சுமங்கலி பெண்கள், சீர்வரிசை பொருட்களை எடுத்துவந்து வழிபட்டனர். திருவிளக்கு பூஜை, 1,080 நெய் தீப வழிபாடு நடந்தது. மூலவர் பாலசுப்ரமணியர், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.