ஈரோடு: கபாலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பொறுப்பேற்றுக் கொண்டார். ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் கங்காதரன், இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ், கபாலீஸ்வரர் கோவில் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமிஷனர் அலுவலகம், ஜே.சி., மற்றும் ஏ.சி., அலுவலகம், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில், பயிற்சி முடித்த இவர், முதன் முதலாக இங்கு செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.