பழநி : பழநி முருகன் கோயிலில் தினமும் தங்கரதப் புறப்பாடு நடத்த வேண்டும் என, வணிகர்கள் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அக்கடிதத்தில் பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கவுரவ தலைவர் கந்த விலாஸ் செல்வகுமார் கூறியிருப்பது: பழநி கோயிலில் தினமும் இரவு 7:00 மணிக்கு வெளிப்பிரகாரத்தில் தங்கரதப் புறப்பாடு நடைபெறும். தங்கரதம் இழுக்க ரூ.2000 கட்டணமாக பக்தர்கள் செலுத்துவர். கொரோனாவால் கடந்த மார்ச் 20 முதல் தங்கரதப் புறப்பாட்டிற்கு அரசு அனுமதிக்கவில்லை. இந்நிலையில் தைப்பூச விழாவின் போது 5ம் திருவிழாவில் கோயில் அலுவலர்களால் தங்கரதப் புறப்பாடு நடந்தது.தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், மீண்டும் வழக்கம் போல் தங்கரதப்புறப்பாடு நடத்த வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.