பதிவு செய்த நாள்
08
பிப்
2021
05:02
பவானி: பவானி செல்லியாண்டியம்மன், மாரியம்மன், எல்லையம்மன் கோவில், மாசி மாத திருவிழா வரும், 16ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. இதையடுத்து, 22ல் கம்பம் நடுதல், 24ல் கொடியேற்றம், மார்ச், 2ல் அம்மனுக்கு புனித நீர் ஊற்றுதல், 3ல் அம்மை அழைத்தல், பொங்கல் திருவிழா, 4ல் கம்பம் எடுத்தல், 5ல் பாரிவேட்டை, 6ல் தெப்போற்சவமும் நடக்கிறது. மார்ச், 7ல் மஞ்சள் நீராட்டு, திருவீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.