பரமக்குடி : பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆயிர வைசிய இளைஞர் சங்கம் சார்பில் திருவிளக்கு வழிபாடு நடந்தது.
ஆயிரவைசிய சபை தலைவர் போஸ் தலைமை வகித்தார். தாளாளர் லெனின் குமார் வரவேற்றார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நிறைவடைந்து, மூலவருக்கு தங்க கவசமும், உற்ஸவர் மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தனர். சுமங்கலி பூஜை, குழந்தை செல்வம், கல்வி வரம், வியாபாரம் பெருக பூஜைகள் நடத்தப்பட்டன. ஏராளமானோர் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.சபை உப தலைவர்கள் நாகு, கண்ணன், செயலாளர் மகேந்திரன், பொருளாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் சபை, கல்வி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் சுதர்சன் நன்றி கூறினார்.