பதிவு செய்த நாள்
09
பிப்
2021
10:02
வடவள்ளி:கோவை, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், லிப்ட் அமைக்கும் பணிக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அடிவாரத்தில் இருந்து, படிக்கட்டுகள் வழியாகவும், சாலை வழியாகவும் பக்தர்கள் மலைக்கு மேல் சென்று வருகின்றனர்.மலைமேல் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் இருந்து, மீண்டும், 90 படிக்கட்டுகள் கடந்து பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வேண்டியுள்ளது. மருதமலையில், ரோப் கார் அமைக்க சாத்தியக்கூறு இல்லை என, வல்லுனர் குழு அறிக்கை அளித்தது. கார் பார்க்கிங் பகுதியில் இருந்து, கோவிலுக்கு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில், 3.40 கோடி ரூபாய் மதிப்பில், லிப்ட் அமைக்கப்படும் என, முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.லிப்ட் அமைக்கும் பணிக்கு, அடிக்கல் நாட்டு விழா நேற்று மருதமலையில் நடந்தது. அமைச்சர்கள் வேலுமணி, சேவூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினர். கலெக்டர் ராஜாமணி, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.ஒரு முறை 20 பேர்மருதமலை ராஜகோபுரத்தின் வலது பாகத்தில், இரண்டு நிலைகளில், மேலே செல்வதற்கு இரண்டு லிப்ட். மேலிருந்து கீழே இறங்குவதற்கு இரண்டு லிப்ட் என, மொத்தம், 4 லிப்ட் அமைக்கப்படவுள்ளது.லிப்டில் ஒருமுறைக்கு அதிகபட்சம், 20 நபர்கள் செல்லலாம். ராஜகோபுர அடிவாரத்திலிருந்து கோவிலுக்கு, 67 அடி உயரம் உள்ளது. முதல் 41 அடி வரை, முதல்நிலை லிப்ட் செல்லும். அதன்பின் சிறிது தூரம் நடந்து, 41 அடி முதல் 67 அடிவரை இரண்டாம்நிலை லிப்ட் செல்லும். மின்வெட்டு சமயங்களில், ஜெனரேட்டர் முறையில் லிப்ட் இயங்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.