பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை முனியனார் கோவிலில் வரும் 12ம் தேதி லட்ச தீப விழா நடக்கிறது.அதனையொட்டி, அன்று காலை 9:00 மணிக்கு முனியனார் சுவாமி, பொன்னியம்மன் மற்றும் கிராம தேவதைகளுக்கு, அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு அலங்கார காவடியுடன், ஊர் பிரதஷ்ணம் வருதல், 6:00 மணிக்கு வாண வேடிக்கை, மாலை 6:30 மணிக்கு லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. இரவு 10:00 மணிக்கு, பக்த பிரகலாதன் எனும் பட்டாபிஷேக நாடகம் நடக்கிறது.ஏற்பாடுகளை, கிராம நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.