Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ... துர்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு துர்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமூர்த்திமலையில் கோடை விழாவை கொண்டாட தீர்த்தம் : திரளும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திருமூர்த்திமலையில் கோடை விழாவை கொண்டாட தீர்த்தம் : திரளும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

15 பிப்
2021
11:02

உடுமலை:கோடைத்திருவிழாவை கொண்டாட, திருமூர்த்திமலையில் இருந்து தீர்த்தம் எடுத்துச்செல்ல, சுற்றுப்பகுதி கிராம மக்கள் திரளாக வந்து செல்கின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களிலுள்ள, அம்மன் கோவில்களில், மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில், கோடை விழா சிறப்பாக கொண்டாடப்படும்.


இத்திருவிழாக்களுக்கு, நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி முடிந்ததும், பல்வேறு புனித தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வருவார்கள்.குறிப்பாக, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்து, பாலாற்றில், தீர்த்தம் எடுத்து, அலங்கரித்து, சிறப்பு பூஜை நடத்தி, மேளதாளத்துடன், கிராமத்துக்கு எடுத்து செல்வார்கள்.மாசி மாதம் துவங்கியுள்ளதையடுத்து, திருமூர்த்திமலைக்கு தீர்த்தம் எடுக்க வரும் கிராம மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.கிராம மக்கள் கூறுகையில், கோடை காலம் துவங்கியதும், கிராமத்திலுள்ள, அம்மனுக்கு, நோன்பு சாட்டி வழிபடுகிறோம். அம்மை உட்பட கோடை கால நோய்களை தவிர்க்க, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை கொண்டு, தீர்த்தம் எடுத்து வழிபடுகிறோம். குறிப்பாக, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் கரை தொட்டு செல்லும் பாலாற்றில், தீர்த்தம் எடுத்துச்செல்லும், நடைமுறையை, நீண்ட காலமாக பின்பற்றி வருகிறோம், என்றனர். திருமூர்த்திமலைக்கு தீர்த்தம் எடுக்க வரும் பக்தர்களுக்கு, தனியிடம் உட்பட சில வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். விரதமிருந்து வரும் பக்தர்கள், குளிக்கவும், தீர்த்த கும்பங்களை வைத்து வழிபடவும், தனியிடம் ஒதுக்க வேண்டும்.சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் போது, பக்தர்கள், பஞ்சலிங்க அருவியிலும், பாலாற்றின் கரையிலும், இடமில்லாமல், தவிக்கின்றனர்.இது குறித்து இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால்  மட்டுமே நிகழ ... மேலும்
 
temple news
திருவாரூர்; திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த கூத்தனூரில் மகா சரஸ்வதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவில் இன்று (செப்.,11) காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவில், சக்தி கொலுவில் அம்பாள், காமாட்சி அம்மன் அலங்காரத்தில் நேற்று ... மேலும்
 
temple news
பாலக்காடு; கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன்-பெருமாள் கோவில்களில் துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar