25 ஆண்டுகளுக்கு பின் பெருகிய திருக்கோஷ்டியூர் திருப்பாற்கடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2021 04:02
திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் முன்புறமுள்ள திருப்பாற்கடல் என்றழைக்கப்படும் கோயில் குளம் 25 ஆண்டுகளுக்கு பின் தற்போது நிரம்பியுள்ளது.
இந்த ஆண்டு பரவலாக மழை பெய்துள்ளது. ஆனால் இக்குளத்திற்கான வரத்துக் கால்வாய் துார்ந்து போனதால் குளத்தில் நீர் தேங்கவில்லை. இதனையடுத்து ஊராட்சி மன்றம், சிவகங்கை தேவஸ்தானம், பணியாளர்கள் இணைந்து எடுத்த நடவடிக்கையால் வரத்துக்கால்வாய்கள் சீரமைக்கப்பட்டன. சில வாரங்களுக்கு முன்பாக ஏரியூர் கண்மாய் நிரம்பி மணிமுத்தாறு மூலம் பிராமணக்கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்படுத்தி திருப்பாற்கடலுக்கு நீர் வரத்து துவங்கியது. அதில் ஓரளவு நீர் வந்தது. தற்போது மீண்டும் கீழவளவு வேம்பக்குடி கண்மாயிலிருந்து உப்பாறு மூலம் பிராமணம்பட்டி கண்மாய் வந்து மீண்டும் நீர்வரத்து துவங்கியது.அதில் குளம் முழுமையாக பெருகியுள்ளது. குளத்து நீரிலுள்ள பாசி,கொடிகள்அகற்றும் பணி துவங்கியுள்ளது. 1996க்கு பின் தற்போது குளம் நிரம்பியுள்ளதால் பலரும் உற்சாகமாக குளித்தனர்.