பழநி மாரியம்மன் கோயிலில் திருக்கம்பம் ஊன்றும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2021 08:02
பழநி : பழநியில் மாசித்திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன்கோயிலில் திருக்கம்பம் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள கிழக்குரதவீதி மாரியம்மன் கோயிலில் பிப்.12 முதல் மார்ச் 4 வரை மாசித்திருவிழா நடக்கிறது. இதையொட்டி பழநி- தேக்கம் தோட்டம் எல்லை கருப்பண்ணசாமி கோயில் அருகே மரத்தில் கம்பம் வெட்டி தயார் செய்து எடுத்து வந்தனர். சிறப்பு பூஜைக்குப்பின் நள்ளிரவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கம்பம் கோயில் முன்பு நடப்பட்டது. கம்பத்திற்கு பால், தீர்த்தம் ஊற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 2ல் திருக்கல்யாணம், அம்மன் தங்கக் குதிரை வாகனத்தில் உலா வருதல், மார்ச் 3ல் தேரோட்டம் நடைபெறும். பிப்.24 முதல் மார்ச் 4 வரை தினமும் தங்கக்குதிரை, வெள்ளி யானை, வெள்ளி காமதேனு வாகனங்களில் மாரியம்மன் திருவீதிவுலா நடக்கும். ஏற்பாடுகளை செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.