பொள்ளாச்சி :நெகமம் நாகர் மைதானத்தில், பழமையான மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும், மாசி மாதத்தில், கோவில் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா பூச்சாட்டுதலுடன் நேற்று துவங்கியது.வரும், 19ம் தேதி அதிகாலை, திருமூர்த்திமலை தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது. 22ம் தேதி அம்மன் சக்தி அழைத்தல் நடக்கிறது. 23ம் தேதி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார்.வரும், 24ம் தேதி மாவிளக்கு ஊர்வலம், விநாயகர் கோவிலில் இருந்து, பூவோடு புறப்பாடும் நடக்கிறது. 25ம் தேதி அம்மன் திருவீதி உலாவும், 26ம் தேதி அபிேஷக ஆராதனையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு, தினமும் இரவு, 7.00 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.