திருச்செங்கோடு: திருச்செங்கோடு, சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தக் குடம் ஊர்வலம் நடந்தது. திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசிக் குண்டம் திருவிழா, கடந்த, 12ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர் நிகழ்ச்சியாக குண்டம் இறங்க காப்பு கட்டிய பக்தர்கள், கோவிலிலிருந்து திருச்செங்கோடு மலையடிக் குட்டைக்கு சென்று புனித நீர் எடுத்து ஊர்வலமாக கோவிலை அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை, குத்து விளக்கு பூஜை, அக்னி கரகம், அலகு குத்தி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து கோவிலை வந்தடைவர்.