வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே சிவனாதபுரம், சர்வ சித்தி விநாயகர் ஸ்ரீ தொட்டிச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பணம் ஆவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று காலை 6.45 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடக்கிறது.
விழாவில் கொடுமுடி சென்று தீர்த்தம் கொண்டு வருதல், நேற்று மாலை 4 மணி அளவில் முளைப்பாரி எடுத்தல், மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜை, தொடர்ந்து யாக பூஜை நடந்து இன்று காலை 5 மணி அளவில் இரண்டாம் கால யாக பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து மகா கும்பாபிஷேக பெருவிழா நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவனாதபுரம் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.