ராமேஸ்வரம் : உலக நன்மைக்காக ராமேஸ்வரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க மகா ருத்ர யாகம் நடந்தது.
பிப்.,18 ல் ராமேஸ்வரம் காஞ்சி மடத்திற்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமி வருகை தந்தார். அன்று முதல் மடத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க பூஜை, அபிேஷகம் நடந்து வருகிறது. நேற்று காஞ்சி மடத்தின் வளாகத்தில் உலக நன்மைக்காக யாக குண்டத்தில் 12 வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க மகா ருத்ர யாகம்நடந்தது. தொடர்ந்து 2ம் நாளாக இன்றும் (பிப்.,22) மகா ருத்ர யாகம் நடக்க உள்ளதால், இன்று விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்க உள்ளார். பின் புனித நீர் கலசத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று அபிேஷகம் செய்து தரிசனம் செய்ய உள்ளார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.