பதிவு செய்த நாள்
23
பிப்
2021
04:02
புதுச்சேரி: சுதாகர் நகர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. ரெட்டியார்பாளையம் சுதாகர் நகர், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபி ேஷக விழா நேற்று முன்தினம் காலை விநாயகர் பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 6 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது.காலை 9 மணிக்கு கடம் புறப்பாடும், காலை 9:10 மணிக்கு மூலவர் விமானம், விநாயகர், பாலமுருகன், துர்கை மற்றும் நாகதேவதை சன்னதி கும்பாபிேஷகம் நடந்தது. மூலவருக்கு மகா அபிேஷகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.விழாவில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, துணை சபாநாயகர் பாலன், இளங்கோ லட்சுமி பவுண்டேஷன் இளங்கோ, அகில இந்திய சமூக நல இயக்க தலைவர் புகழேந்தி, பொதுச் செயலாளர் கணேசன், வர்த்தக சங்க தலைவர் சிவசங்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் மூர்த்தி, துணைத் தலைவர் ராதா கிருஷ்ணன், செயலாளர் சரவணன், பொருளாளர் இளந்திரையன், நிர்வாகிகள் உலகநாதன், புகழேந்தி செய்திருந்தனர். இளங்கோ லட்சுமி பவுன்டேஷன், அகில இந்திய சமூக நல அமைப்பு, ஆலய நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கினர்.