வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி திருக்கோவில் 138 ம் ஆண்டு மாசி மகாசிவன்ராத்திரி தேர் திருவிழா வருகிற மார்ச் 11ம் தேதி துவங்க உள்ளது.
முன்னதாக வீரக்குமாரசாமிக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. தேர்த் திருவிழாவிற்காக தேரை தயார் செய்யும் பணி நடைபெறும். நேற்று காலை 9.30 மணி அளவில் தேர் முகூர்த்தக்கால் முதன்மைதாரர்கள் நற்பணி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியம், மற்றும் முன்னாள் அறங்காவலர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையில் கோவில் குலத்தவர்கள், முன்னாள் அறங்காவலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வருகிற மார்ச் 5 ம் தேதி காலை 8.30 மணியளவில் தேர்க்கலசம் வைத்தல் நிகழ்வு நடக்க உள்ளது. தொடர்ந்து மார்ச் 11ம் தேதி தேர் திருவிழா தொடங்க உள்ளது.