ராஜபாளையம் : ராஜபாளையம் சொக்கர் கோயிலில் மாசிமக பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. கடந்த பிப்., 17ல்கொடியேற்றத்துடன் துவங்கி தினமும் காலை அபிஷேகம், இரவில் சுவாமி, அம்மன் வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏழாம்நாளான நேற்று காலை சுந்தரேஸ்வர சுவாமி, மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. ராஜபாளையம் , சுற்று கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதமாக இனிப்பு, மஞ்சள் கயிறு, குங்குமம் வழங்கப்பட்டது. இரவில் சுவாமி, அம்பாள் பூப்பல்லக்கில் வீதி உலா நடந்தது.