திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் பெருமாளுக்கு தீர்த்தவாரி வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2021 08:02
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் தேகளீசபெருமாளுக்கு வரும் 27ம் தேதி தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி.
நடு நாட்டு திருப்பதி என போற்றப்படும், திவ்ய தேசங்களில் ஒன்றான, திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள், ஆண்டு தோறும் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடைபெறும் மாசிமக தீர்த்தவாரியில் கலந்து கொள்ள பாதம் தாங்கிகளில் புறப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பெருமாள் புறப்பாடு நடைபெறவில்லை. இச்சூழலில் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து தொடர்ந்து இருந்து வருவதால், வரும் 27ம் தேதி காலை 7:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள், சக்கரத்தாழ்வார் ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் படித்துறை வழியாக ஆற்றில் எழுந்தருளி, மாசி மக தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது. அன்று மாலை 4:00 மணிக்கு மாசி கருடசேவை. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.