மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பசலி மாசி திருவிழாவில் கேடயத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வந்தனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மேதகு ராணி சாஹிபா மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பசலி மாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஏழாம் நாள் இரவு கேடயத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் கணபதி ராமன், ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் மற்றும் பலர் செய்திருந்தனர்.