திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான சங்கு, சக்கரம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2021 11:02
திருமலை: திருப்பதி கோவிலுக்கு, தேனியை சேர்ந்த பக்தர் ஒருவர், ரூ.2 கோடி மதிப்பிலான தங்கத்தினாலான சங்கு, சக்கரத்தை காணிக்கையாக அளித்திருக்கிறார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து, தங்கள் காணிக்கைகளை குவித்து வருகின்றனர். மனதில் நினைத்தது அல்லது தொழிலில் லாபம் ஏற்பட்டு வேண்டியது நிறைவேறினால், கோடிக்கணக்கான ரூபாயை அந்த பக்தர் காணிக்கையாக அளிப்பர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, தமிழகத்தின் தேனி மாவட்டத்தை சேர்ந்த பக்தர் ஒருவர், தங்கத்தினாலான சங்கு, சக்கரத்தை, காணிக்கையாக அளித்திருக்கிறார். இதன் மதிப்பு ரூ.2 கோடி.