பதிவு செய்த நாள்
25
பிப்
2021
11:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மாசி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்து, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாளை மாலை, 3:49 மணி முதல், 27 மாலை, 2:42 மணி வரை, பவுர்ணமி திதி உள்ளது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கால், அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ?தொடர்ந்து, 12வது மாதமாக, பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்துள்ளது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.