பதிவு செய்த நாள்
25
பிப்
2021
11:02
கொளத்தூர்: கொளத்தூர், கருங்கல்லூர் ஊராட்சி, மேட்டுப்பழையூர், விநாயகர், மத்தூர் மாரியம்மன் கோவில் கும்பாபி?ஷக விழா, நேற்று நடந்தது. காலை, 9:00 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள், புனித நீர் தெளித்தனர். கொளத்தூர் ஒன்றிய குழு துணைத்தலைவர், தர்மகர்த்தா மாரப்பன், குமார், ஊர்கவுண்டர் பெருமாள், மந்திரி கவுண்டர் ராஜலிங்கம், கம்பத்துக்காரர் ஏழுமலை உள்ளிட்ட, கோவில் நிர்வாகிகள் பங்கேற்றனர். விழாவில், சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபி ?ஷகத்துக்கு பின், சிறப்பு அலங்காரத்தில், மத்தூர் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, அன்னதானம் நடந்தது.