Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதூர் பொன் மாரியம்மன் மாசி திருவிழா திருத்தணியில் 11 மாதங்களுக்கு பின் கட்டண அபிஷேகம் துவக்கம் திருத்தணியில் 11 மாதங்களுக்கு பின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கல்யாணம்: நேரலையில் ஒளிபரப்பு
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கல்யாணம்: நேரலையில் ஒளிபரப்பு

பதிவு செய்த நாள்

26 பிப்
2021
09:02

சென்னை:  சென்னை, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் மாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் விமர்சியாக நடைபெற்றது.

திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டு பழமை வாய்ந்தது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவ திருவிழா, வெகு விமரிசையாக நடக்கும். இந்தாண்டும் தியாகராஜ சுவாமி கோவிலில் மாசி பிரம்மோற்சவம் விழா சிறப்பாக நடைபெற்ற வருகிறது. பிரம்மோற்சவத்தின் நேற்று திருத்தேரோட்டம் வெகு நடைபெற்றது.  இன்று திருக்கல்யாணம் விமர்சியாக நடைபெற்றது.


இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியினை பக்தர்கள்  https://www.youtube.com/watch?v=LlJrfuvpc6o&feature=youtu.be, https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial  என்ற YouTube channel மூலம், காலை 8.30 மணி முதல், பக்தர்கள் நேரலையில் கண்டு தரிசனம் செய்தனர்.

சுவாமி திருக்கல்யாண சிறப்புகள் :
தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் என்பது பார்வதி பரமேஸ்வரரின் (சிவன்) திருமண காட்சி ஆகும்.  பர்வத ராஜாவின் மகளாக பிறந்து வளர்ந்த பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் இமய மலையில் திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடைப்பெற்றது. அங்கு முனிவர்கள், தேவர்கள் மற்றும் அனைத்து ஜீவராசிகளும் ஒரே இடத்தில் இருந்ததால், பாரம் தாங்காமல் பூமியின் வடக்கு பகுதி கீழ்த்திசை நோக்கி சென்று, தெற்கு திசை மேல் ஓங்கிவிட்டது. பூமியை சமன்படுத்த சிவன், அகத்திய முனிவரை அழைத்து "நீர் தெற்கு திசைக்கு சென்றால் இந்த பூமி சமமாகிவிடும், அதனால் நீர் தெற்கு திசைக்கு செல்க" என்று உத்தரவிட்டார். அதற்கு அகத்தியர் "நான், தங்களின்  திருமணத்தை காண வேண்டுமே" எனக்கூற, சிவன் "நீர் எந்தன் திருமணக் காட்சியை காண வேண்டும் என்று நினைத்தால், அந்த இடத்தில் நான் காட்சி அளிப்பேன்" என வரமளித்தார். அதனை ஏற்று அகத்தியரும் தெற்கு திசை நோக்கி வந்து பூமியை சமன்படுத்தினார். அதன் பிறகு அகத்தியர் திருவொற்றியூருக்கு வந்த போது, சிவபெருமானின் திருமண கோலத்தை காண விரும்பியதால், பரமேஸ்வரர் (சிவன்) கல்யாண சுந்தரராக காட்சி அளிக்கிறார். இதுவே இப்பிரம்மோற்சவத்தின் 9ம் நாள் விழாவான திருக்கல்யாண உற்சவமாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கதாகும். முருகப்பெருமானுக்குரிய ... மேலும்
 
temple news
பெங்களூரு; ம.ஜ.த., – எம்.எல்.சி., சரவணாவின் தொண்டு அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி நாளன்று, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ. கோடி ... மேலும்
 
temple news
தென்காசி; குற்றாலநாதர் கோயில் சித்திரை சபையில் திருவாதிரை தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது.நடராஜர் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி கோவிலில் இருந்து, உ.பி.யில் உள்ள பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar