பதிவு செய்த நாள்
26
பிப்
2021
10:02
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், 11 மாதங்களுக்கு பின், நேற்று முதல், பக்தர்கள் கட்டண அபிஷேகம் துவங்கியது. கொரோனா தொற்று காரணமாக, கடந்தாண்டு, மார்ச் மாதம், 20ம் தேதி முதல், திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் தரிசனம் மற்றும் கட்டண அபிஷேகம் ரத்து செய்யப்பட்டது.
நேற்று முதல்இதையடுத்து, கடந்தாண்டு, செப்.1ம் தேதி, தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, கோவில் நடை திறந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால், கட்டண அபிஷேகம் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்தது.மாறாக, கோவில் நிர்வாகம் சார்பில், அதிகாலை, 5:00 மணி, மாலை, 5:00 மணி ஆகிய இரு வேளை பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. பக்தர்களை கட்டண தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது.இதையடுத்து, 11 மாதங்களுக்கு பின், நேற்று முதல், பக்தர்களின் கட்டண தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. 20 பக்தர்கள்இந்த கட்டண அபிஷேகத்தில், ஒரு டிக்கெட்டிற்கு, இரண்டு பேர் வீதம், மொத்தம், 20 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.பக்தர்கள், ஆன்லைன் மூலமும், மலைக்கோவில் வளாகத்தில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் வந்தும், முன்பதிவு செய்து கொள்ளலாம் என, கோவில் இணை ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.