உலகில் நடக்கும் அத்தனை தீமைக்கும் காரணம் பணம்தான். பணத்தை கொண்டு குறுக்குவழியில் சாதிக்கும் செயல்கள் இப்போது வேண்டுமானால் மகிழ்ச்சி தரலாம். ஆனால் எதிர்காலத்தில் துன்பத்தை விளைவிக்கும். பணத்துக்கு ஆசைப்பட்டு லஞ்சம் வாங்கி அவமானப்படுவோர் பலர். ‘பணத்தாசை சகல தீமைகளுக்கும் ஆணிவேர்’ என்கிறது பைபிள். சிரிப்புக்கும், கூத்துக்கும், கேளிக்கைக்கும் பணக்காரர்கள் விருந்து நடத்துகின்றனர். அதில் பரிமாறப்படும் மது போதை உண்டாக்கும். அந்த விருந்தில் பேசி தீர்க்கப்படும் பிரச்னைகளுக்காக பணம் கைமாறுகிறது. எவ்வளவு கடினமான முடிச்சையும் பணம் அவிழ்க்கும் என அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் பணத்தால் ஒன்றை பெற முடியாது. ஆண்டவரின் கருணையை வாங்க நினைத்தால் உன் பணம் உன்னுடன் அழிந்து போகும். பொன்னை விரும்பும் பூமியிலே அன்பை நாடும் நல்லவர்களாக இருங்கள்.