ஒருவர் கோபமாக பேசும் போது அதை எதிர்த்தால் சாதனை படைத்தது போலத் தோன்றும். ஆனால் அதுவே கைகலப்பாகி விட்டால் உயிருக்கே ஆபத்து நேரலாம். அலுவலகத்தில் அதிகாரி கோபப்பட்டால், மாணவர் மீது ஆசிரியர் கோபப்பட்டால் அமைதி காப்பதே சிறந்தது. ஏனென்றால் திருத்துவதே அதன் நோக்கம். நியாயத்துக்கு புறம்பாக பெரியவர்கள் நம்மைத் தண்டித்தால் அதற்கு தண்டனை தரும் அதிகாரம் ஆண்டவருக்கு மட்டுமே உண்டு. சரியான சமயத்தில் தவறை உணர்த்தி நல்வழிப்படுத்துவார். ‘‘மிருதுவான பதில் சினத்தை மாற்றி விடும். புண்படுத்தும் வார்த்தைகளோ ஆத்திரத்தை கிளப்பி விடும்’’ எனவே தவறு செய்வோர் திருத்தும் வரை நம்பிக்கையுடன் காத்திருங்கள்.