பதிவு செய்த நாள்
04
மார்
2021
06:03
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையத்தில் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையத்தில், வரசித்தி விநாயகர், வரதராஜப் பெருமாள், முத்து மாரியம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டது. கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 1ம் தேதி திருவிளக்கு வழிபாடு, முதல் கால வேள்வி பூஜையுடன் துவங்கியது.நேற்று முன்தினம், இரண்டாம் கால, மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடந்தது. நேற்று காலை 4:30 மணிக்கு, நான்காம் கால வேள்வி பூஜை முடிந்ததும், தீர்த்த குடங்கள் கோபுர கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. காலை, 6:30 மணிக்கு கோபுர கலசத்திற்கு பேரூராதீனம் மருதாசல அடிகளார், செஞ்சேரி மலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளார் முன்னிலையில், பேரூராதீனம் சிவசாந்தலிங்கர் அருட்பணி மன்றத்தினரால் கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது.பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு பெருமாள் கோவிலில் இருந்து, சீர் வரிசை எடுத்து வந்து, அம்மன் திருக்கல்யாணம் மற்றும் ஊஞ்சல் சேவை நடந்தது. தொடர்ந்து, திருவீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.