பதிவு செய்த நாள்
04
மார்
2021
06:03
தண்டையார்பேட்டை : தண்டையார்பேட்டையில், 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த, செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடைபெற்றது.
சென்னை, தண்டையார்பேட்டை, இந்திரா காந்தி நகரில், 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் உள்ளது.இக்கோவில் புனரமைக்கப்பட்டு நேற்று, கும்பாபிஷேகம் நடைபெற்றது. நான்கு கால யாக சாலை பூஜைகள், ஹோமங்கள், அக்னி பிரதிஷ்டை, சாந்தி ஹோமம் நடத்தப்பட்டது. கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, பக்தர்களுக்கும் தெளிக்கப்பட்டது. அதன் பின், விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.