பதிவு செய்த நாள்
06
மார்
2021
05:03
புதுச்சேரி; கோவில்களில் திருப்பணி , அன்னதானம் என்ற பெயரில் நன்கொடை வசூலிக்கக் கூடாது என அறநிலையத் துறை சுற்றிக்கை அனுப்பியுள்ளது.சட்டசபை தேர்தலையொட்டி, ஊரில் உள்ள கோவில்களுக்கு உதவிகளை செய்வதாக அரசியல் கட்சியினர் வாக்குறுதியளிக்கின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் உள்ள கோவில் அறங்காவலர் குழுக்களுக்கு அறநிலையத் துறை சுற்றிக்கை அனுப்பி உள்ளது.சுற்றறிக்கை விவரம்:தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. கோவில் வளாக சுவர், சிலை துாண், வேலிகளில் அரசியல் கட்சிகளின் பேனர், போஸ்டர் இருக்கக் கூடாது. மேலும் புதிய திட்டங்கள், ஆட்கள் தேர்வு, சம்பள உயர்வு, பணியாளர்கள் இடமாற்றம், கோவில் இடங்கள் ஒதுக்கீடு இருக்க கூடாது.கோவில் வளாகத்தில் அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்கவும், கட்சி, துண்டு பிரசுரங்கள் வழங்க அறங்காவலர் குழுவினர், சிறப்பு அதிகாரி, கோவில் ஊழியர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவக் கூடாது.கோவில் திருப்பணி, அன்னதானம் என்ற பெயரில் நன்கொடை வசூலிக்கக் கூடாது. இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.