சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட தர்மஷம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி வடுக பைரவர் பூஜை நடந்தது.காலை 10:00 மணிக்கு யாக பூஜை தொடங்கியது. பகல் 12:00 மணிக்கு வடுக வைபரவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். கோயில் கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் முன்னிலையில் ரவி சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தி வைத்தார். பிரான்மலை மங்கைபாகர் கோயிலில் உள்ள வடுக பைரவருக்கும் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தப்பட்டது.