மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி- சோமநாதர் கோயிலில் உலக நன்மைக்காகவும் கொரோனா தொற்று ஒழிய வேண்டியும் 351 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு நடைபெற்றது. முன்னதாக ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை நடைபெற்றன. ஏற்பாடுகளை சிவாச்சாரியார்கள் குமார், பரத்வாஜ் மற்றும் கோயில் உழவாரப் பணி மகளிர் செய்திருந்தனர்.