அன்னூர்: பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன் போது ஊரில் பைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி நாளன்று சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். நேற்று இரவு சிறப்பு வேள்வி நடந்தது. இதையடுத்து, பால், நெய், தேன், உள்ளிட்ட திரவியங்களால், பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 9:00 மணிக்கு, அலங்கார பூஜையும், இதையடுத்து, அன்னதானம் வழங்குதலும் நடந்தது. பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அன்னூர், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.