உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமை வாய்ந்த சிவாலயமாக விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு நாளும் இரவு 8 முதல் 8:30 மணி வரை உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்பு பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம். முன்பு சாதாரண பல்லாக்கு மூலம் சுவாமி வீதிஉலா நடந்தது. கடந்த மார்ச் 1 முதல் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்ட புதிதாக வடிவமைக்கப்பட்ட பல்லக்கில் சுவாமி வீதிஉலா நடந்து வருகிறது. சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்ட பாதையில் தினமும் புதிய பல்லக்கில் மங்களநாதர் சன்னதியில் இருந்து உற்சவர் சுவாமி உள் பிரகார வீதி உலாவும், மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலும் பாடப்பட்டு வருகிறது. தினமும் இரவில் நடைபெறும் சுவாமி அம்பாளுக்கான பள்ளியறை பூஜையில் பங்கேற்பது விசேஷமானதாக கருதப்படுவதால், ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு வருகின்றனர்.