விழுப்புரம் : விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையம், அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 16வது ஆண்டு மயானகொள்ளை நடைபெற்றது.
அனிச்சம்பாளையம், அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 1ம் தேதி, மயான கொள்ளை திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து, பால்குடம் ஊர்வலம், 5ம் தேதி கும்ப படையல், அபிஷேக ஆராதனை நடந்தது. பின், நேற்று முன்தினம் அம்மன் வீதியுலாவும், நேற்று மதியம் 2.00 மணிக்கு மகராஜபுரம் மயானத்தில் மயான கொள்ளை நடைபெற்றது.