பதிவு செய்த நாள்
08
மார்
2021
03:03
வால்பாறை: வால்பாறை வாட்டர்பால்ஸ் எஸ்டேட், 2ம் டிவிஷனில் உள்ள, விநாயகர், பத்ரகாளியம்மன், மாரியம்மன், முனீஸ்வரன் கோவில், 58ம் ஆண்டு திருவிழா, கடந்த, 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று முன்தினம் இரவு, விநாயகர் கோவில் பூஜைக்கு பின் பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோவில்களிலிருந்து, ஆற்றங்கரைக்கு சென்று, முனீஸ்வரன் கோவிலில் பூஜை நடந்தது. அம்மன் கரகம் பாலித்து, சக்தி கும்பம் கோவிலை சென்றடைந்தது.நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிசட்டி, மாவிளக்கு எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.