பதிவு செய்த நாள்
09
மார்
2021
05:03
அவிநாசி: அவிநாசி கோவிலில், லிங்கத்திருமேனி மீது மகா சிவராத்திரிக்கு பின்னரே, சூரிய ஒளி விழும் என, சிவனடியார்கள் தெரிவித்தனர்.அவிநாசியில் உள்ள, ஆண்டுதோறும் மாசி மாத இறுதி அல்லது பங்குனி முதல் வாரத்தில், மூலவரான அவிநாசிலிங்கேஸ்வரர் திருமேனி மீது, சூரிய ஒளிக்கதிர்கள் விழும் அதிசயம் நடைபெறும்.இந்த நாட்களில், வழிபாடு நடத்தும் போது, பல்வேறு நன்மை ஏற்படும் என்பதால், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்வர். ஆனால், சூரியஒளி விழும் தேதி குறித்து பக்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இந்த அபூர்வ நிகழ்வு குறித்து, சிவனடியார்கள் கூறியதாவது:மகா சிவராத்திரிக்கு பின், பங்குனி முதல் வாரத்தில் தான், சூரிய ஒளி, லிங்கத்திருமேனி மீது விழும் நிகழ்வு நடக்கும். இது, மூன்று முதல், ஐந்து நாட்களுக்கு இருக்கும். இந்தாண்டு, இதுவரை சூரிய ஒளி, லிங்கேஸ்வரர் மீது விழவில்லை. எனவே, அந்த நாட்களில் அவிநாசிலிங்கேஸ்வரரை வணங்குவது மிகவும் சிறந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் மருது பாண்டியிடம் கேட்ட போது, நான், புதிதாக பொறுப்பேற்றுள்ளதால், எனக்கு இந்த விஷயம் குறித்து தெரியாது, என்றார்.