காரைக்கால்- புதுச்சேரியில் தாமரை மலர திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.சனீஸ்வரபகவான் சன்னதியில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் எள் தீபம் ஏற்றி, வரும் சட்ட சபைத் தேர்தலில் பா.ஜ., கூட்டணிக் கட்சியினர் வெற்றி பெற தாமரை பூக்களால் சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்தார்.பின், பிற கட்சியிலிருந்து விலகி சுமார் 50க்கு மேற்பட்டவர்கள் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், எங்கள் கூட்டணி மக்கள் ஆதரவோடு வெற்றி பெறும். மாநிலம் வளம் பெற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் வேட்பாளர் குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும் பட்சத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் என்றார்.