பதிவு செய்த நாள்
10
மார்
2021
11:03
திருவாரூர்: திருவாரூர், தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் வரும், 25ம் தேதி ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கிறது.
திருவாரூர், தியாகராஜ சுவாமி கோவிலில், பங்குனி உத்திர விழா, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம், வரும், 25ம் தேதி ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கிறது.ஆழித்தேரோட்டத்தை ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்த வேண்டும் என்பது, பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கை. 1990, 1991ம் ஆண்டுகளில், ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடந்தது.அதன்பின், நடப்பு ஆண்டு, ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக, தேரோட்டம் நடைபெறவில்லை. தற்போது, தேர் கட்டுமான பணிகள் நடக்கின்றன. கட்டுமான பணிகள் முடிந்து, 24ம் தேதி இரவு, 7:30 மணிக்கு, ஆழித்தேருக்கு, தியாகராஜர் எழுந்தருளுகிறார். மறுநாள், அதிகாலை, 5:00 மணிக்கு, விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடக்கிறது. காலை, 7:31 மணிக்கு, ஆழித்தேர் வடம் பிடிக்கப்பட்டு, தேரோட்டம் நடக்கிறது.திருவாரூர் ஆழித்தேர் கட்டுமான பணிகள் நடக்கிறது.