மனிதன் மூன்று நிலைகளில் நடுநிலைமையோடு இருக்க வேண்டும் என்கிறார் நாயகம். ‘‘செல்வச் செழிப்பில், வறுமையில், வணக்கத்தில் நடுநிலைமையுடன் இருப்பது மிகவும் சிறப்பானது’’ பணத்தில் மிதக்கும் நேரத்தில் எதையும் சாதிக்கலாம் என்ற ஆணவத்துடன் மனிதன் தீய செயல்களில் ஈடுபடக் கூடாது. நீதி, நேர்மையை பின்பற்றி நடுநிலையுடன் நடக்க வேண்டும். செல்வந்தர்கள் மற்றவருக்கு உதவி செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது. வறுமை வந்த காலத்திலும் நீதிக்கு புறம்பான விஷயங்களில் ஈடுபடாமல் நடுநிலை காக்க வேண்டும். கஷ்டங்களை இன்முகத்துடன் ஏற்கப் பழக வேண்டும். பாகுபாடு இன்றி இன்முகத்துடன் அனைவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டும்.