ஒரு ஏழையின் வீட்டில் நிக்காஹ் நடக்கிறது. பக்கத்து வீட்டிலுள்ள செல்வந்தர் ஒருவரையும் அதில் பங்கேற்குமாறு அழைக்கிறார் ஏழை வீட்டுப்பெண். இந்நிலையில் செல்வந்தர், ‘‘ஏழை வீட்டு திருமணம் தானே! அங்கு ஏன் நாம் செல்ல வேண்டும். அவர் கொடுக்கும் சாதாரண விருந்தில் என்ன பெரிதாக இருக்கப் போகிறது. அங்கு சென்றால் அவமானம் நேருமே!’’ என மனதிற்குள் நினைத்தார். இது சரியான அணுகுமுறையல்ல. ஒருமுறை ஏழை ஒருவர் நாயகத்திற்கு ஆட்டுக்கால் குழம்பு சாப்பிடக் கொடுத்தார். ‘‘ வெறும் எலும்பைக் கடித்து பசியாற முடியுமா...ஏன் ஆட்டுறைச்சி வாங்கவில்லை?’’ என அவரை அலட்சியப்படுத்தவில்லை.