‘‘கணவரை இழந்த பெண்கள் மீது இரக்கம் காட்டுங்கள். அவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள். இப்படிப்பட்டவன் இறைவனின் வழியில் செல்லும் நல்லவனுக்கு ஒப்பானவன். இரவு முழுவதும் தொடர்ந்தாற் போல் சோம்பலைக் கைவிட்டு நின்றபடியே இறைவனை வணங்கியவனைப் போலவும், நோன்பு நோற்றவன் போலவும் பெருமைக்குரியவன் ஆவான்’’ * எளியவர்கள் மீது இரக்கம் காட்டுவோர் மீது இறைவனும் இரக்கம் கொள்வான். * பூமியிலுள்ளோர் மீது நீங்கள் இரக்கம் காட்டினால் வானத்தில் உள்ளவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்.