திருநள்ளாறு கோவிலில் நாட்டியாஞ்சலி விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2021 09:03
காரைக்கால் - திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று நாட்டியாஞ்சலி நடைபெற்றது.காரைக்கால், திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் மற்றும் சனீஸ்வர பகவான் கோவிலில், 16ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, நேற்று துவங்கியது.ராஜகோபுரம் அருகில் உள்ள கெய்த்தான் மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவை, கோவில் நிர்வாக அதிகாரி காசிநாதன். குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் முன்னிலை வகித்தார்.புதுச்சேரி ஜெயஸ்ரீ நாராயணன் குழுவினர், சென்னை கனக கிருஷ்ணா பிரசாந்த், காரைக்கால் சித்ரன் கோபிநாத். கும்பகோணம் தீபக் வெங்கடேஷ் ஆகியோரின் நாட்டியாஞ்சலி நடைபெற்றது.இன்று, பெங்களூர் ஓஜஸ்வினி, சென்னை ஸ்ருதி ஆனந்த், திருச்சி விருந்தா ரமணன் ஆகியோரின் நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது.