வீரக்குமார் சுவாமி கோயிலில் தேரோட்டம்: பக்தர்கள் உற்சாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2021 10:03
வெள்ளகோவில்: வெள்ளகோவில், வீரக்குமார சுவாமி 138 ம் ஆண்டு மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. உற்சாகமாக பக்தர்கள் வடம் வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக பிப்ரவரி 22 ம் தேதி திங்கட்கிழமை தேர் முகூர்த்தக்கால் போடப்பட்டு, மார்ச் 5 ம் தேதி தேர் கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 3 மணி அளவில் பள்ளய பூஜை நடந்தது. மாலை 6 மணி அளவில் தேர்தல் நிகழ்ச்சி நடந்தது.
செல்லாண்டியம்மன் சுவாமி வைத்த சிறிய தேர் முன்னால் சிறுவர்கள் மற்றும் பெண்கள் இழுத்துச் சென்றனர். தொடர்ந்து வீரக்குமாரசாமி திருத்தேர் பக்தர்கள் உற்சாகமாக வடம்பிடித்து இழுத்தனர். மாலை 5 மணி அளவில் அவிட்ட நட்சத்திரத்தில் சுவாமியை ரதத்திற்கு எழுந்தருளச் செய்தல், தொடர்ந்து மாலை 6 மணி அளவில் திருத்தேர் நிலை பெயர்த்தல், காங்கேயம் டி.எஸ்.பி., தனராசு, வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், செயல்அலுவலர் ரத்தினம் பாள், கோவில் குலத்தவர்கள், நற்பணி மன்றத்தினர், முன்னாள் அறங்காவலர்கள், உட்பட பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் கோவிலின் பின்புறம் இரண்டாம் நிலைப் பகுதியில் 6.30 மணிக்கு நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இன்று மாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெற்று தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடைபெறும் தொடர்ந்து தேவஸ்தான மண்டப கட்டளை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளைகுலத்தவர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.