ராமேஸ்வரம் : மாசி திருவிழாவை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி திருத்தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளியதும், பக்தர்கள் தேரின் வடத்தை ரதவீதியில் இழுத்து வந்தனர்.
மார்ச் 4 ல் ராமேஸ்வரம் கோயிலில் மாசி சிவராத்திரி விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 9ம் நாள் மாசி தேரோட்டம் விழாவான நேற்று காலை 10:00 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியா விடை அம்மனுடன் அலங்கரித்த மாசி திருத்தேரில் எழுந்தருளினர். பின் கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தியதும் கோயில் இணை ஆணையர் தனபால், தக்கார் குமரன் சேதுபதி, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் மாசி திருத்தேரின் வடத்தை பக்தர்கள் இழுத்து கோயில் ரதவீதியில் மாதி தேரோட்டம் உலா வந்தது. 10ம் நாள் விழா இன்று (மார்ச் 13) மாசி அமாவாசையை யொட்டி சுவாமி, அம்மன் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி பக்தர்கள் தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும்.