பாலக்காடு: திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது வடக்கந்தறை திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். இங்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நேற்று அதிகாலை கணபதி ஹோமத்துடன் ஆரம்பித்தன. தொடர்ந்து ஈடு வெடி, உருளி எழுந்தருளல் நடைபெற்றன. இதையடுத்து செண்டை மேளம் முழங்க மூன்று யானைகளின் அணிவகுப்புடன் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை மோகன் பாகவதர் குழுவின் பஜனை நடைபெற்றனர். இரவு 8 மணியளவில் யானை அணிவகுப்புடன் அம்மன் வீதியுலா வந்தனர். விழாவை கொரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி நடந்தன.