பதிவு செய்த நாள்
14
மார்
2021
11:03
மேச்சேரி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலுக்கு, வேட்பாளர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டம், மேச்சேரியில், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. ஜோதிடத்தில் நிழல் கிரகமான ராகுவின் அதிதேவதை பத்ரகாளி. அந்த அம்மனை வழிபட்டால், எதிரிகளை வெல்ல முடியும். ஆயுள் கண்ட பாதிப்பு குறையும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. இதனால், தினமும் ராகு காலம், அமாவாசை நாளில், பத்ரகாளியம்மன் கோவிலில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மாசி அமாவாசை, நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. அன்று இரவு, தமிழக சமூகநலத்துறை அமைச்சர், ராசிபுரம் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் சரோஜா, கோவிலுக்கு வந்து வழிபட்டார். நேற்று காலை, பா.ம.க., மாநில தலைவர், அக்கட்சியின் பென்னாகரம் வேட்பாளர் மணி, பத்ரகாளியம்மனை வழிபட்டு, பென்னாகரம் சென்றார். தேர்தலில் வெற்றி பெற, அரசில் கட்சி வேட்பாளர்கள், பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரத்தொடங்கியுள்ளனர்.