பதிவு செய்த நாள்
14
மார்
2021
11:03
கன்னிவாடி : மகா சிவராத்திரியை முன்னிட்டு கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், உற்சவர், நந்திக்கு, 30 வகை அபிேஷகம் நடந்தது. நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டு, உற்சவருக்கு ராஜ அலங்காரத்துடன், உள்பிரகார வலம் நடந்தது.
விசேஷ பூஜைகளுடன், மகா தீபாராதனை நடந்தது. தேவார, திருவாசக பாராயணம், அன்னதானம் நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், பார்வதி சமேத பரமேஸ்வரன் கோயில், காரமடை ராமலிங்கசுவாமி கோயில், குட்டத்துப்பட்டி ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், ஆத்துார் காசி விசுவநாதர் கோயில்களில் சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.வேடசந்துார்: தாடிக்கொம்பு நந்திகோவில்பட்டி நந்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நான்கு கால பூஜையை தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. கோயில் தலைவர் காளியாயி (எ)ராமசாமி, செயலாளர் பாலசுப்பிரமணி, துணைத்தலைவர் சுப்பிரமணி, பொருளாளர் பழனிச்சாமி, குலகுரு ஜோதி சவடமுத்து பங்கேற்றனர்.ஆர்.கோம்பை தாசமநாயக்கனுார் தொப்பியசாமி மலை உச்சியில் உள்ள பழமையான ஈஸ்வரன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் நடந்தே சென்று தரிசித்தனர்.